மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!
Friday, January 6th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்துள்ளது.
ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கொழும்பில் இன்று(06.01.2023) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளரும், கிழக்கு பிராந்திய அமைப்பாளருமான தோழர் ஸ்ராலினின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில்,
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் வகையிலான வேலைத் திட்டத்துடன் செயற்பட முன்வருகின்ற பல்வேறு தரப்புக்களையும் இணைத்து கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


