மக்கள் நலன்களை முன்னிறுத்தி பொது முடிவுடன் செயற்படுங்கள் – கட்சியின் யாழ் மாவட்ட, பிரதேச நிர்வாக செயலாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Sunday, May 12th, 2019

நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் மக்களின் எதிர்பார்ப்புக்களையும் கட்சியின் நலன்களையும் முன்னிறுத்தியதுமான பொது தீர்மானங்களை முன்னிறுத்தி அதை ஆரோக்கியமான முறையில் செயற்படுத்தும் விதமாக முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேசங்களின் நிர்வாக செயலாளர்களுடனான விஷேட சந்திப்பொன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். 

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த கட்சியின் தோழகளுக்கு ஒரு நிமிட அஞ்சலி மரியாதை செலுத்திய பின்னர் கூட்டத்தை ஆரம்பித்த  உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள், அனைத்து தரப்பினரிடையேயும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஏற்றத் தாழ்வுகள் வருவது இயல்பானதொன்றுதான். அந்தவகையில் எமது கட்சி தற்போது ஆட்சி அதிகாரங்களில் இல்லாதிருந்தாலும் நாம் எமது செயற்பாடுகளை மக்களிடம் முடியுமானவரையில் கொண்டுசெல்லவேண்டியது அவசியமாகும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நாம் ஒவ்வொருவரும் பேதங்களை மறந்து பொதுமக்களது நலன்களையும் தனிப்பட்ட நலன்களுடன் முழுமையாக முன்னெடுக்கும் போதுதான் கட்சியின் நலன்களில் மேம்பாடு காணமுடியும் என்பதுடன் நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் விமர்சனங்களும் கட்சியினதும் மக்களினதும் நலன்களை முன்னிறுத்தியதாக ஆக்கபூர்வமானதாக அமைவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் சமகால சூழ்நிலைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வேலியே பயிரை மேய்கின்ற இத்தகைய நிலை எப்போது தகர்த்தெறியப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களை மட்டுமன்றி தங்களது ஆதரவாளர்களையும் ஏமாற்றி வருகின்றது -...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஆசி வழங்கும் வகையில் பிரதேச மக்களினால் கல்லாறு சர்வார்த்த ஸ்ரீ சித்த...

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஏ...
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட ...
விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் நலன்கருதி - இந்தியாவில் இருந்து மண்ணெண்ணெய் கொண்டுவரும் நடவடிக...