மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. சுட்டிக்காட்டு!

Friday, November 24th, 2017

எமது மக்களில் பலர் இன்றும நலன்புரி நிலையங்களிலும், தற்காலிக வசிப்பிடங்களிலும் வாழ்ந்து வருகின்ற நிலையே தொடர்கின்றது. எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன. மேலும், காணிப் பிணக்குகள் பல ஆயிரக் கணக்கில் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் காணி, நாடாளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், வலுவாதார மற்றும் வனஜீவராசிகள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கிளிநொச்சி, முல்லதை;தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் அதிக கூடிய வகையில் காணிப் பிணக்குகள் நிலவுகின்றன. காணியற்ற நிலைமை, காணி ஆவணங்கள் இன்மை, காணி ஆவணங்கள் யுத்த காலத்தில் தொலைந்துள்ளமை, படையினர் வசமுள்ள காணிகள், நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள், சட்ட ரீதியற்ற வகையில் காணிகள் கொள்வனவு மற்றும் விற்பனைகள், ஒதுக்கப்பட்ட காணிகளில் குடியிருத்தல் போன்ற பல்வேறு பிணக்குகள் காணப்படுகின்றன.

அத்துடன், 2016ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமானது யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு ஒரு நல்ல ஏற்பாடாக இருக்கின்ற நிலையில,; இந்தச் சட்டமானது நடைமுறைக்கு வந்த திகதியிலிருந்து இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே பயனுறுதிமிக்கதென இச்சட்டத்தின் 4ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் பார்க்கின்றபோது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி மேற்படிச் சட்டமானது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதியுடன் பயனுறுதியை இழந்துவிடும்.

எனவே, இத்தகைய நிலையின் கீழ் மேற்படி சட்டத்தின் பயனுறுதியை மேலும் நீடிக்க வேண்டியத் தேவை இருக்கின்றது. இதனை கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்திற்கு எடுத்து, அந்த ஏற்பாட்டினை மேற்கொண்டு, எமது மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-2 copy

Related posts: