போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடம் வெளிப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Saturday, December 12th, 2020

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கின்றமை போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு எதிர்ப்பு அரசியல் பற்றிய மாயையை ஏற்படுத்தி, அதில் குளிர் காய்கின்ற  போலித் தமிழ் தேசியவாதிகள்,  தன்மீது இருக்கின்ற அரசியல் பயம் காரணமாகவே வரவு செலவுத் திட்டத்தில் கலந்து கொளளாமல் அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையிலான எமது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்ட விவாதங்களில்,  கடந்த இரண்டு வாரங்களாக நடாத்திய போலி தேசியம் பேசும் பத்து திருடர் கூட்டத்துடன் டொலர் கஜேந்திரன் அவர் கூட்டாளி பெ(b)ன்ஸ் ஆகியோர் மக்கள் மனங்களில் உணர்ச்சி பொங்கும் வகையில்   அனல் பறக்க பேசியிருந்தனர்.

அவர்களின் பேச்சுக்கள் தமிழ் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.

ஆனால் இறுதியில் ஈ.பி.டி.பியின் மீது இருக்கும் அரசியல் பயம் காரணமாக அரசாங்கத்தை தாஜா பண்ணும் விதமாக வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நழுவிக் கொண்டனர் எனவும் தெரிவித்தார் அதேவேளை, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதே  தன்னுடைய இலக்கு எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், எதுஎவ்வாறு இருப்பினும் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதில் சிறிதளவு விட்டுக் கொடுப்பிற்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும், போலித் தமிழ் தேசியவதிகளும் மக்களை ஏமாற்றும் அரசியலை விடுத்து, வெளிப்படை தன்மையோடு  மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முனவருவார்களாயின் அவர்களையும்  இணைத்துக் கொண்டு  பயணிக்க தயாராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நடைபெற்ற வன்முறையை ஒட்டுமொத்த இலங்கை தேசமும் எதிர்த்து குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது – ஊடகவி...
திருமலை மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றவுள்ள பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!
பகிரங்க விவாதத்துக்குப் அச்சமின்றி வாருங்கள் - தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுத்துள்ளார் அ...

நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ள...
தடம் மாறிச் செல்லும் இளைஞர்களை வெகு விரைவில் சரியான திசைவழி நோக்கி அழைத்துச் செல்ல நாம் தயாராக இருக்...
யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று - அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் ட...