நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016

கடந்த காலத்தில் நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்துடன் இருந்தமையால் தமிழ் மக்களுக்கான தேவைகளை அதிகளவில் பெற்றுக்கொடுத்து சாதித்துக் காட்டியிருக்கின்றோம். ஆனால் தற்போது அரசியல் அதிகாரங்களுடன் இருப்பவர்கள் மக்களையும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களையும் யதார்த்த வழிமுறைகளில் முன்னெடுத்து செல்வதாக தெரியவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

லங்காஶ்ரீ தொலைக்காட்சியின் புத்தம் புதிய அரசியல் பிரமுகர்கள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே. கடந்த காலத்தில் நாம் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணைகளுக்கு அமையவே அமைந்திருந்தன.

ஆனால் தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கவில்லை. இருந்தும் தொடர்ச்சியாக மக்களது தேவைகளை மையப்படுத்தி எமது பணிகளை செய்து வருகின்றோம்.

ஒரு சிலரது சுயநலன்களுக்காக தமிழ் மக்கள் சரியாக வழிநடத்தப்படாமல் போனதன் விளைவாகத்தான் முள்ளிவாய்க்கால் என்னும் பெரும் தயரத்தை எமது இனம் சந்திக்க நேர்ந்தது.

ஊடகங்கள் எம்மைப்பற்றி விமர்சிப்பதை நாம் தடுக்கவில்லை. ஆனால் எம்மை மையப்படுத்திய அவதூறுகளை வெளிப்படுத்தும் முன் அது தொடர்பாக எம்மிடமும் தொர்புகொண்டு தெளிவைபெற்று கருத்துக்களை முன்வையுங்கள் என தெரிவிதுள்ளார்.

அவரது முழுமையான செவ்வியை கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும்.

Related posts: