மாணவர்களுக்கு நியாயம் வழங்கப்படுகிறதா? – கல்வி அமைச்சர்!

Friday, May 19th, 2017

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கற்பதற்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது பாடசாலை மட்டத்தில் நேர்முகப்பரீட்சை நடத்தப்படுகிறது.

உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக மாணவர்கள் வேறு பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள நடத்தப்படும் நேர்முகப் பரீட்சையின்போது அவர்களுக்கு வழங்கப்படும் புள்ளிகள் உட்பட உரிய விபரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நேர்முகப்பரீட்சையின் போது மாணவர்களுக்கு நியாயம் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்தவது இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் வசதிகள் கட்டணத்திற்கு மேலதிகமாக பாடசாலை அபிவிருத்திக்கான நிதியை பெறுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் அல்லது மாகாண கல்விச் செயலாளரின் அனுமதியை பெற்றிருப்பது அவசியமாகும். இது தொடர்பான முறைப்பாடுகள் இருக்கும் பட்சத்தில் 1988 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: