பொதுத் தீர்மானங்ககளின் அடிப்படையில் செயற்படுங்கள் – தீவகப் பிரதேச செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Sunday, January 6th, 2019
மக்களின் நலன்சார்ந்ததும் கட்சியின் நலன்களை முன்னிறுத்தியதுமான பொது தீர்மானங்களை முன்னிறுத்தி அதை ஆரோக்கியமான முறையில் செயற்படுத்தும் விதமாக ஒவ்வொரு தீர்மானங்களையும் முன்னெடுத்துச் செல்ல அனைவரும் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தீவக பிரதேசத்திற்குட்பட்ட வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களின் கட்சி பொறுப்பாளர்கள்,செயற்பாட்டாளர்கள்,பிரதேச சபை உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
வட்டாரக் குழுக்களை மேலும் வலுப்படுத்தி மக்களுக்கான தேவைப்பாடுகளை பிரதேசங்களில் மேலும் அதிகரிக்க ஒவ்வொரு பிரதேச கட்டமைப்புகளும் முன்னின்று உழைக்க வேண்டும்.
தனிப்பட்ட நலன்களுடன் பொதுமக்களது நலன்களும் முழுமையாக முன்னெடுக்கும் போதுதான் கட்சியின் நலன்களில் மேம்பாடு காணமுடியும். அந்தவகையில் செயற்பாடகளில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் அனைத்தம் கட்சியினதும் மக்களினதும் நலன்களை முன்னிறுத்தியதாக ஆக்கபூர்வமானதாக அமைவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


