பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Sunday, November 24th, 2019
பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய கட்டடத் தொகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நிரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இன்று (24) காலை குறித்த விற்பனை நிலையத்திற்கு சென்ற அமைச்சர் குறித்த விற்பனை நிலையத்தில் காணப்பம் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் விற்பனை நிலையத்தின் கடை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் விளக்கமளித்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோடாபய ராஜபக்ச மற்றும் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அகியோருடன் கலந்துரையாடி மேற்படி மீன் விற்பனை நிலையத்தின் தேவைகளை ஒரு மாத காலத்துள் படிப்படியாகப் பூர்த்தி செய்து தருவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சவால்களையும் இடர்களையும் எதிர்கொண்டு மக்கள் பணிகளில் வெற்றிகண்டு வருகின்றோம் - டக்ளஸ் தேவானந்தா!
கடந்த கால வரலாற்று தவறை மக்கள் இம்முறை மாற்றி எழுதுவர் - பருத்தித்துறையைில் டக்ளஸ் எம்.பி!
வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவ...
|
|
|



