சவால்களையும் இடர்களையும் எதிர்கொண்டு மக்கள் பணிகளில் வெற்றிகண்டு வருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 14th, 2017

காலச் சுழற்சிக்கேற்ப ஒவ்வொரு செயற்பாடுகளின் வடிவங்களும் மாற்றம் கண்டுவருகின்றன. இம்மாற்றங்களின் அடிப்படையில் சவால்களையும் இடர்களையும் எதிர்கொண்டு எமது கட்சியின் கொள்கை வழிநின்று வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வெற்றிகண்டு வருகின்றோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலவலகத்தில் இன்றையதினம் (14) கட்சியின் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட செயற்பாட்டாளர்களுடனான விஷேட சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யுத்தத்திற்கு முன்னரான காலம், யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் மற்றும் யுத்தத்திற்கு பின்னரான காலம் என வேறுபட்ட நிலமைகள் இருக்கின்ற போதிலும் அந்த மாற்றங்களுக்கு முகம் கொடுத்து மக்களின் அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகள் தொடர்பாக செயலாற்றி வந்திருக்கின்றோம்.

குறிப்பாக இந்த மாற்றங்களுக்கேற்ப எமது கட்சியும் பல்வேறுவகையான மாறுதல்களையும் வளர்ச்சிப்போக்குகளையும் கண்டுவந்துள்ளது.

இந்நிலையில் அழிவு யுத்தம் முடிவடைந்த பின்னரான இக்காலப்பகுதியில் மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவும், முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டதுமாக கட்சியின் அரசியல் கட்டமைப்புகளில் பல மாற்றங்களை கொண்டுவந்திருக்கின்றோம்.

இத்தகைய ஒரு சூழலில்ல்தான் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வட்டார ரீதியாக எமது கட்சியின் கட்டமைப்புகள் வலுவாக கட்டமைக்கப்பட்டு அவைசார்ந்த வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டமைப்பின் வெற்றிக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் கட்சியின்  தோழர்கள் செயற்பாட்டாளர்கள், மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும் எதிர்காலங்களிலும் தொடர்ச்சியான அர்ப்பணிப்போடும் சேவை மனப்பாங்கோடும் உழைக்கவேண்டும்.

கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் குறைந்தளவான அரசியல் பலத்தினூடாக நாம் அதிகளவான மக்கள் பணிகளை முன்னெடுத்திருக்கின்றோம். அவற்றில் வெற்றியும் கண்டிருக்கின்றோம். கிடைக்கின்ற வாய்ப்புக்களையும் சூழ்நிலைகளையும் மக்கள் நலன் சார்ந்ததாக மதிநுட்பத்துடன் செயல்படுத்திதாலேயே அவற்றில் நாம் வெற்றிகொள்ள முடிந்திருந்தது.

எனவே முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளினதும் வெற்றிக்கான பலம் எமது ஒவ்வொருவரது கரங்களிலேயே தங்கியுள்ளது.  இதற்காக நாம் ஒருமித்த கருத்துக்களுடன் எமது செயற்பாடுகளை முன்னெடுத்தச் செல்லவேண்டும் என்றார்.

Related posts:


புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஊடகவ...
ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி - இதுவே நாட்டின் இன்றைய நிலை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
வென்னப்புவ வெள்ளமண்கரை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது நவீன மீன்பிடித் துறைமுகம் – அமைச்சர் டக்...