பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் வீண்போகாது – அமைச்சர் டக்ளஸ் உறுதியளிப்பு!

Saturday, April 20th, 2024

பேசாலை மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறையு செய்து தரப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் கோரிக்கையான பேருந்து நிலையம்ப, தபாலகம்,  மீன் சந்தை ஆயுவேத வைத்திய நிலையம்  உள்ளிட்ட மக்களது அவசிய தேயைகள் அடங்கிய வளாகம் ஒன்றை அமைப்பதுதொடர்பில் அவதானம் செலுத்துவதற்காகவும்
தெரிவித்துள்ளார்.

பேசாலை வெற்றி மாதா ஆலயத்தில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்பட்டதாகவே செயற்பாடுகள் ஒவ்வொன்றும் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் குறித்த பகுதி மக்களது வேண்டுகோளுக்கிணைய அமைவிடம்  தொடர்பில் நேரில் ஆராய்ந்துகொண்டார்.

குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதுமே அமைச்சரின் இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

இன்நிலையில் மன்னார் நகருக்கு வருகை தந்த அமைச்சர்  முதலில் பேசாலை நகரப்பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் நவீன சந்தை தொகுதி தபால் நிலையம், அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து கொண்டார்.

குறிப்பாக பேசாலை நகர் மத்தியிலுள்ள கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியில் பேருந்து நிலையம், சந்தை தொகுதிதை, தபால் நிலையம், ஆய்ர்வேத வைத்தியசலை அமைப்பதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆராயுமாறு துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

ஜீவனோபாய தொழிலை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் சாவற்கட்ட...
கடமையை பொறுப்பேற்றுள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் வா...
தரகு அரசியல் தமிழ்த் தலைமைகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்களே - டக்ளஸ் தேவானந்தா எம...

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவா...
சமூர்த்தி திட்டங்கள் நலிவுற்ற மக்களின் வளமான எதிர்காலத்திற்கானது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
அனர்த்த நிலைமைகளை தடுக்கும் வகையில் ஏதுநிலைகளை ஆராய அமைச்சர் டக்ளஸ் இரணைமடு குளத்திற்கும் விஜயம்!