பூநகரி பிரதேச கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

பூநகரி பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 26 பேருக்கு கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
நீர்வேளாண்மை சார் உற்பத்திகளை விருத்தி செய்வதுடன் கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால், நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு கடல்பாசி செய்கைக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பூநகரி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் முதல் கட்டமாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று, இரண்டாம் கட்டத் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றி...
ஆக்குரோஷமான கோஷங்கள் எதனையும் பெற்றுத் தராது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ...
|
|