புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 8th, 2019

அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு இலங்கையில் இராஜதந்நிர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்ற நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் புலம்பெயர்ந்து சென்று, அங்கு பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கும் போதிய வசதிகளுடான வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் அனைவரையும் பிரிவினைவாதிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற ஒரு நிலை இந்த நாட்டில் சிலரிடையே நிலவுகின்றது.

இந்த நிலைப்பாடானது, இலங்கையில் முக்கியமான சில விடயங்களை முன்னெடுக்கின்ற நிலையில் மேலோங்கச் செய்யப்படுகின்றது. இந்த நிலைப்பாடானது இந்த நாட்டுக்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல. எனவே, புலம்பெயர்ந்தோர் தொடபிலும் உரிய வலுவான வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Related posts:

மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வனவளத் திணைக்களம் தடையாகவுள்ளது – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் தெரிவிப்...
தமிழ் மக்களின் வாழ்க்கையை அடியோடு சிதைத்த தமிழ்த் தரப்பு இன்று ‘கம்பெரலியவுடன்’ புரண்டு கிடக்கிறது -...
சுதந்திர தினத்தில் தமிழ் மக்கள் புதிய தீர்மானம் ஏற்க வேண்டும். - சுதந்திர தினச் செய்தியில் அமைச்சர்...