பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை இன்று இரவு வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக தீர்மானித்துள்ளது.
கூட்டு எதிரணியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகக் கொண்டவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தற்போது நடைபெற்றுவருகின்றது.
குறித்த விவாதம் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக 11 மணித்தியாலங்கள் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முடிவு செய்துள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
|
|