பழிவாங்கும் மனோநிலையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும்: வன்னி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, July 3rd, 2020



நடந்தது நடந்தது முடிந்து விட்டது. நடக்கப் போவது நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோநிலையை வளர்த்துக் கொள்வதன் ஊடாகவே எமக்கான சிறந்த வாழ்கை தரத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கனகராயன் குளம், குறிசுட்ட குளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்கவில்லை என்பதை சுடிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா, மக்கள் பழிவாங்கும் மனோநிலையில் இருந்து விடுபட்டு நடைமுறை சாத்தியமான முறையில் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இரண்டாம் உலக யுத்தத்தின் போது அமெரிக்காவினால் பாதிக்கப்பட்ட ஜப்பான், பழிவாங்கும் மனோநிலையில் செயற்படாமல் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டமையினால் இன்று பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுமளவிற்கு
வளர்ந்து நிற்கின்றது.
அதேபோன்று தமிழ் மக்களும் தங்களுடைய எதிர்காலத்தினை வளப்படுத்துவதற்கு தேவையான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டு்ம் எனவும் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் அரசியல் பலத்தை எமக்கு வழங்கியிருந்தால் அவர்கள் எதிர்நோக்கிவரும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர...
அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் அதிகாரிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்துக் கலந்துரையாடல்...