காக்கைதீவு மீனவர் இறங்குதுறை பகுதி பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு!

Saturday, December 24th, 2016

காக்கைதீவு கடற்றொழிலாளர் இறங்குதுறை பகுதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜயநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்டார்.

தமது ஜீவனோபாய தொழிலை தொடர்ந்தும் தாம் தடைகளின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாக உள்ள காக்கைதீவு இறங்குதறை பகுதியில் உள்ள பிரச்சினைகளை நீக்கி சிரமமின்றி தொழிலை மேற்கொள்வதற்கு நடவடிக்கைமேற்கொண்டு தருமாறும் ஆனைக்கோட்டை சாவற்கட்டு பகுதி கடற்றொழிலாளர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தாவிடம் சில தினங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுதிருந்தனர்.

1

இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்த குறித்த இறங்குதுறையை பார்வையிட்டதுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கெகாள்ளும் பிரச்சினைகளையும் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதனிடையே கடந்த 60ஆண்டுளுக்கு மேலாக இத்துறைமுகப் பகுதியில் தமது பகுதி  தொழிலாளர்கள் தோழிலிலீடுபட்டு வருவதாகவும் தற்போது தொழிலாளர்களது எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படகுகளை கரைசேர்க்கும் இறங்குதுறை விஸ்தீரணம் குறைவாக உள்ளதால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறித்த இறங்குதுறை பகுதியில் சேற்றுடன் கூடிய நிலப்பரப்பு அதிகமாக காணப்படுவதால் தொழிலுக்கு பெரும் பாதிப்பை அது ஏற்படுத்துவதாகவும், இவற்றை நிவர்த்தி செய்வதுடன் குறித்த பகுதிக்கு கடல் அணை அமைக்கப்படவேண்டும் எனவும்  தெரிவித்த கடல் தொழிலாளர்கள் தமக்கு குறித்த கடற்பரப்பில் 50 மீற்றருக்கு மண் பரவி அப்பிரதேசத்திலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய இறங்குதுறை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

7

குறித்த இறங்குதுறையின் நிலைமைகளை அராய்ந்தறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அடுத்த வருட அரம்ப காலப்பகுதியில் இதுதொடர்பான பிரச்சினைகளை துறை சார்ந்தவர்களது கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி தென்மேற்கு பிரதேச நிர்வாக செயலார் வெலிச்சொர் அன்ரன் ஜோண்சன் (ஜீவா) கட்சியின் கிளிநொச்சி மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் இரத்தினம் அமீன் மற்றும் கட்சியின் வலி தென்மேற்கு பிரதேசத்தின் நிர்வாக உறுப்பினர்கள் கடற்றொழிலாழர்கள் என பலரும் உடனிரந்தனர்.

6

2

Related posts:

புனர்வாழ்வுபெற்ற போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சலுகை அடிப்படையிலான வங்கிக்கடன் - டக்ளஸ் தேவான...
திலீபனை நினைவு கூறும் விடயத்தை தூக்கிப் பிடிப்பது மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு அபகரிப்பிற்காகவே ...
உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

கற்பனை இராச்சியங்களை காட்டியவர்கள் மக்களை நடுத்தெருவில் கைவிட்டுள்ளார்கள் - செயலாளர் நாயகம் தெரிவிப்...
நந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகார...
மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்திய எழுதாரகை படகை அப்புறப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!