பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் தேசிய எழுச்சி மாநாடு ஆரம்பம்!
Sunday, May 8th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
முன்னதாக யாழ் மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் நிறுவப்பட்டுள்ள எல்லான், பரராஜசேகரன்,பண்டார வன்னியன் ஆகிய மூன்று மன்னர்களது உருவச் சிலைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் புடைசூழ டக்ளஸ் தேவானந்தா நிகழ்விடத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
அங்கு தமிழாராட்சி நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் சுடரேற்றியும் வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்விடத்தில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்ததுடன் நினைவுச்சுடரை ஏற்றிவைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.






Related posts:
புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் செவிடன் காதில் ஊதிய சங்கின் கதையாகியுள்ளது – நாடாளுமன்றில் ட...
தரம் - 03 அதிபர் சேவை – உதவிக் கல்விப் பணிப்பாளர் விவகாரங்களுக்கு ஜனவரியில் தீர்வு - அமைச்சர் தேவாவ...
|
|
|


