பட்டம் பெற்றும் நியமனங்களில் உள்வாங்கப்படவில்லை – யாழ் பல்கலை கலைத்துறை பட்டதாரிகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!
Friday, May 17th, 2024
பட்டம் பெற்றும் பதவிநிலை நியமனங்களில் உள்வாங்கப்படாமையால் தாம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகள் தமக்கான தொழில் நிலை நியமனங்களை பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்திற்கு இன்றையதினம் (17.05.2024) வருகைதந்திருந்த குறித்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தொழில் நிலை நியமனங்கள் கிடைக்காமையினால் தாம் எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியான பல்வேறுபட்ட பிரச்சினைகளை அமைச்சரிடம் எடுத்துக்கூறி அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர்
குறிப்பாக தமக்கான பட்டம் வழங்குவதில் அன்றைய காலப்பகுதியில் இருந்துவந்த கொரோனா தொற்று மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் கற்றல் மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் பெரிதும் தடைப்பட்டுப்போயிருந்த நிலை காணப்பட்டது.
அதுமட்டுமல்லாது இதன்காரணமாக குறித்த காலத்திற்குள் தமக்கான பட்டங்கள் கிடைக்கப்பெறுவதில் குழப்ப நிலையும் இருந்துவந்தது. ஆனால் தமது ஒத்த காலப்பகுதி ஏனைய பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான சூழ்நிலையை எதிகொண்டிருந்தபோதிலும் அவர்களுக்கு அண்மையகாலததில் வழங்கப்பட்ட தொழில் நியமனங்களில் தொழில்வாய்ப்பு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது
ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குறிப்பாக வடமாகாணத்தை சேர்ந்த 48 பட்டதாரிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த மாறுபட்ட நியமன வழங்கலில் பட்டதாரிகள் ஆகிய எமது நிலையே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இதன்காரணமாக எமது வயது மற்றும் குடும்ப பொருளாதார நிலைகளை கருத்தில் கொண்டு தொழில்வாய்ப்பு நியமனங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் என அமைச்சர் டக்டளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் நிலைமைகளை கருத்தில்கொண்ட அமைச்சர் அவ்விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சு மற்றும் அதிகாரிகளின் கவனத்திறகு கொண்டுசென்றுள்ள நிலையில் அதற்கான தீர்வு விரைவில் கிடைக்கப்பெறும் என்றும் அதுவரை மனந்தளராது தற்போது முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருமாறும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts: