நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட நிதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, April 10th, 2024

நெடுந்தீவு பிரதேச மக்களுக்கான  அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விசேட நிதியினைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்உற்பத்தி திட்டம் பூர்த்தியானதும் மின் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேசத்தில் இடம்பெற்ற சமுர்த்தி அபிமானி வர்த்தக சந்தையை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றும்   போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

மேலும், நெடுந்தீவின் பிரதான வீதி புனரமைப்பு, சாராப்பிட்டி நன்னீர் நிலைகளை தொடர்ச்சியாக பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை, பனைசார் உற்பத்திகளை பதனிடும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்தல் உட்பட்ட பல்வேறு விடயங்களில் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குறித்த விடயங்கள் தொடர்பில் முன்னுரிமை செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அப்பழுக்கற்ற தூய்மையான அரசியலையே நாம் மக்களுக்காக செய்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!
கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும்...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் - திருத்தங்களு...