நெடுந்தீவு பகுதிக்கும் காற்றாலைமூலமான  மின்வசதி  பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 8th, 2016

தற்போது எமது கோரிக்கைக்கு அமைவாக, எழுவைதீவுக்கு காற்றாலை மூலம் மின்சாரம் வழங்கப்படுகின்ற நிலையில், மின் பிறப்பாக்கிகள் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வரும் வடக்கின் ஏனைய தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவுப் பகுதிகளில் இந்த பிறப்பாக்கிகள் அடிக்கடி பழுதடைந்துவிடும் காரணத்தாலும், போதியளவு மின் விநியோகம் இன்மையாலும், அதிக செலவினையும் கருத்தில் கொண்டு  மேற்படி காற்றாலை மூலமான மின்னுற்பத்தி வசதிகளை இப்பகுதிகளுக்கும் செய்து கொடுக்குமாறும் கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி விவகார அமைச்சு தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

அதே நேரம் யாழ் குடாநாட்டில் மின்தடை தற்போதும் இடம்பெற்று வருகின்றன. அதே போன்று கொழும்பிலும்கூட ஞாயிற்றுக்கிழமை உட்பட வார நாட்களிலும் திடீர் திடீர் என இவ்வாறான மின் தடைகள் ஏற்படுவதைக் காண முடிகின்றது. தொழில்நுட்ட ரீதியிலான ஏதேனும் கோளாறுகள் இதற்குக் காரணமா? அல்லது வேறேதும் காரணங்கள் உண்டா என்பது பற்றி அறியத் தருமாறும், இவ்வாறு தடைகளை ஏற்படுத்தாத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-1 copy

Related posts: