சூளைமேட்டுச் சம்பவம் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! (ஒலிப்பதிவு இணைப்பு)

Sunday, September 2nd, 2018

1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பான என்மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர்.

இலங்கையின் அரசியல் கட்சிகளின் தலைவர்களை புதுடில்லிக்கு வருமாறு இந்திய அரசு அழைத்துள்ளது. இந்நிலையில் இலங்கை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் செல்லவுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் இடம் பெற்றுள்ளார்.

1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இந்தியாவின் தேடப்படும் குற்றவாழியாக டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பதாக அரசியல் உள்நோக்கத்துடன் செய்திகள் பரப்பப்பட்டன.   இந்நிலையில் இந்தியாவுக்கான பயணத்தை டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்ளவுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்ததாவது-

இது ஒரு அரசியல் உள் நோக்கமுடையது. நீதிமன்றுக்கு யாராவது சமூகமளிக்கவில்லை என்றால் அந்த நீதிமன்றத்தால் அவரை கண்டுபிடிக்குமாறு அல்லது அழைத்து வந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி பொலிசாருக்கு ஆணையிடுவது வழமை.

இந்த சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லாதுவிட்டாலும் ஈ.பி.ஆர.எல்.எவ். என்ற அமைப்பில் இருந்த காரணத்தால் அமைப்பில் இருந்த எனது பொறுப்பு காரணமாக அந்தவழக்கை நான் எதிர்கொண்டிருந்தேன். அதன் பின்னர் இந்திய மத்திய அரசினதும் தமிழ் நாட்டு அரசாங்கத்தினதும்  ஒப்புதல் பெற்று  நான் 1990 ஆம் ஆண்டு இலங்கை மீண்டிருந்தேன்.

அந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் நான் இருந்தமையால் நீதிமன்றுக்குச் சமூகமளிக்கவில்லை என்ற காரணத்தால் நீதிமன்று எனக்கு  அழைப்பாணை  ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் நான் அதற்கு சரியான காரணத்தை கொடுத்திருந்தமையால் அந்த அழைப்பாணை எப்போதோ நீக்கப்பட்டுவிட்டது.

அதனால் குறித்த வழக்கு தொடர்பாக எனக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. தற்போதும் அந்த வழக்கு விசாரணை இருக்கின்றது. இதற்கு நான் வீடியோ காணொளியூடாக முன்னிலையாகி வருகின்றேன். அதுமட்டுமல்ல அந்த வழக்கு மிகவிரைவில் நிறைவுக்கு வந்துவிடும் என்றும் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியாவின் அழைப்பின் பெயரில் சபாநாயகர் கருஜயசூரியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான நிமால் சிறீபாலடி சில்வா, ராவூவ் ஹக்கீம், லக்ஸ்மன்கிரியல்ல, றிசாட்பதீயுதின், மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா. தினேஸ்குணவர்த்தன, விஜிதஹேரத் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே செல்லவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

(ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது)

Related posts:

கடந்த காலத்தில்  தேசியவாதத்தை பேசியவர்களால் தாம் ஏமாற்றமடைந்ததை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர் - டக்ளஸ்...
நாம் அன்று கூறியதையே மனப்பாடம் செய்து கூட்டமைப்பு இன்று கூறிவருகின்றது : இதுவே யதார்த்தம் – டக்ளஸ் எ...
தனங்கிளப்பில்இறால் வளர்ப்பை ஆரம்பிப்பதற்கான முன்னாய்த்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்!