நியமனத்தில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது நியமனம் – அமைச்சர் டக்ளஸை நேரில் வந்து கௌரவித்தனர் யாழ் பல்கலைப் பட்டதரிகள்!

Thursday, August 1st, 2024


……..
பட்டம் பெற்றும் பதவிநிலை நியமனங்களில் உள்வாங்கப்பதிருந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் துரித முயற்சியால்
நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இன்னிலையில்  குறித்த 48 பட்டதாரிகளும் தமக்கான  நியமனத்தை  பெற்றுத்தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பாராட்டி கெளரவித்திருந்தனர்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு
இன்றையதினம் (01.08.2024) வருகை தந்திருந்த குறித்த பதவி நிலை  நியமனம் பெற்ற பட்டதாரிகள்
அமைச்சருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்ததுடன் அவரை பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசில் வழங்கி கௌரவித்தனர்

முன்பதாக கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் குறித்த காலப்பகுதிக்கு சற்று பிந்திய காலத்தில் பட்டம் கிடைக்கப்பெற்றதால்  நாட்டின் ஏனைய பட்டதாரிகளுக்கு பதவினிலை நியமனங்கள் வழங்கப்பட்டபோது இவர்களுக்கு உரிய காலப்பகுதியில் குறித்த பதவி நிலை நியமனங்கள் கிடைக்காதிருந்தது.

இதையடுத்து பெரும் அசௌகரியங்களுக்குள்ளான குறித்த பட்டதாரிகள் அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்திற்கு  வருகைதந்து தாம் எதிர்கொள்ளும் பொருளாதார ரீதியான பல்வேறுபட்ட பிரச்சினைகளை  எடுத்துக்கூறி அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர்

பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் நிலைமைகளை கருத்தில்கொண்ட அமைச்சர் அவ்விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சு மற்றும் அதிகாரிகளின் கவனத்திறகு கொண்டுசென்றுள்ள நிலையில் அதற்கான தீர்வு விரைவில் கிடைக்கப்பெறும் என்றும்   உறுதியளித்திருந்தார்

இன்னிலையில் குறித்த பட்டதாரிகளுக்கு தற்போது பதவி நிலை  நியமனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதையடுத்து தமக்கான தொழில் வாய்ப்பை உறுதிசெய்து பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு குறித்த நியமனதாரிகள் தமது நன்றிகளையும் கௌரவிப்பையும் நேரில்  வந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ்...
வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து - ஜனாதிபதி ரணி...