நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தவருக்கு ஆழ்மன அஞ்சலி – ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்புச் செய்திக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, April 1st, 2021
மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர், வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்பு செய்தி அதிர்ச்சியையும் ஆழ் மன துயரையும் தந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நித்திய உறக்கத்தில் ஆழ்ந்துள்ள அவருக்கு எனது ஆழ்மன அஞ்சலி மரியாதையை செலுத்துவதுடன் அவரை விசுவாசித்த அனைத்து மக்களுக்கும் ஆறுதல் கூறுகின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இன்று யாழ் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளதாக மன்னார் ஆயரில்லம் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே அவரது மரணம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ளள தனது அனுதாபச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது - எம்.பி. டக்ளஸ் தேவான...
கால நிலை தொடர்பில் விழிப்புடன் இருங்கள் - கடற்றொழிலாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!
முல்லை பால் பதனிடும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்கான எரிபொருள் கிடைப்ப...
|
|
|


