நாம் ஒருபோதும் குறுகிய இனவாதம் பேசமாட்டோம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Monday, February 19th, 2018

இனவாதம் தூண்டப்பட்டு அதனால் பெறப்படுகின்ற மக்களது வாக்குகள், இன்னொரு இனத்தை அழிப்பதற்கே என அர்த்தப்படுத்திக் கொள்வது கொலைக்குச் சமமானது. வாக்கு கேட்பவர்கள் எந்தளவிற்கு இனவாதத்தைக் கக்கி மக்களை உசுப்பேத்தினாலும் தூண்டினாலும் அம் மக்கள் திடீர் உணர்ச்சி மேலீட்டால் வழங்குகின்ற வாக்குகள் இன்னொரு இனத்தை அழிப்பதற்கானதாக இராது.

தம் இனத்தைப் பாதுகாக்கப்பதற்கான வாக்குகளாகவே அவை கருதப்படல் வேண்டும். அவ்வாறு ஓர் இனத்தைக் காப்பது என்பது, அந்த இனத்தின் – மக்களின் அடிப்படை உரிமைகள் முதற்கொண்டு அரசியல் உரிமைகள் வரையிலான ஏற்பாடுகளை பெறுவதாகவும், பேணிப் பாதுகாப்பதாவும் அமைதலே வேண்டும்.

இது, இன்னொரு இனத்தின் மீதான இனவாதமாக இருக்க முடியாது. இங்கு இனவாதமென்பது ஒரு சிலரது சுயலாபம் கருதிய பேசு பொருளாக மாத்திரமே கொள்ளப்படுகின்றதே அன்றி, அது செயற்படு பொருளல்ல. இதனை நன்கு உணர்ந்து கொள்கின்ற நிலையில் எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு எந்தவொரு தரப்பினரும் தடையாக இருக்கப் போவதில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம் இத்தகைய குறுகிய இனவாதம் பேசித்தான் எமது மக்களின் வாக்குகளை  பெற வேண்டும் என்ற கொள்கை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய எம்மிடம் இல்லை. எனவே எமது வெற்றியானது மனிதாபிமானத்தைக் கொண்டது என்பதையும் தோல்விகள் இனவாதத்தை நோக்கியது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் இறுதி வரைவு தொடர்பான விவாதத்தில் இன்றையதினம் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

அரசியலமைப்புப் பேரவையின் அமைப்பை மீள் பரிசீலித்தல் வேண்டும் - நாடாளுமன்றில்டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்...
நடமாடும் சேவையின்போது பணம் செலுத்தாது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித மக்களுக்கு அதை இலவசமாக வழங்...
காங்கேசன்துறை சரக்கு படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு இன்று அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...