நானாட்டான் பிரதேச சபை பாதீடு நிறைவேற்றலில் முறைகேடு – நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளசிடம் கோரிக்கை!

Friday, December 24th, 2021

நானாட்டான் பிரதேச சபையின் வரவுசெலவு திட்டம் முறைகேடான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த பிரதேச சபையின் உறுப்பினர், இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தந்த நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். – 24.12.2021

Related posts: