நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 26th, 2020

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தீவகத்தின் அபிவிருத்திக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், ஈ.பி.டி.பி. யாரிடம் வாக்குகளை கேட்கின்றதோ அந்த மக்களின் சுபீட்சமான மக்களின் வாழ்விற்கே அதன் வெற்றி பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஊர்காவற் துறை பருத்தியடைப்பு பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்

இதனிடையே இருப்பதை பாதுகாத்து,அழிவுகளின்றி  முன்னோக்கி நகருகின்ற எமது கரங்களை பலப்படுத்துவீர்களாயின் இந்த வருட இறுதிக்குள் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் என்று ஊர்காவற்துறை சென் ஜேம்ஸ் சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...
விடுமுறை நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதி...
மக்கள் வரிசையாக நிற்கின்ற நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!