நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Tuesday, August 3rd, 2021

கடற்றொழில் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலார் திருமதி. இந்து இரத்ராயக்க, கடற்றொழில் திணைககளத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இதன்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் கடற்துறை சார் அபிவிருத்தி நடவடிக்கைகள் நீர் வேளாண்மை திட்டங்கள், அதன் பெறுபெறுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக மற்றும் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கடற் பண்ணை உயிரின வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த மாவட்டங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளது தகவல் அறிக்கையின்பிரகாரம் அத்திட்டங்களின் அடுத்து கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது..

இதனிடையே ஒலுவில் மீன்பிடித் துறைமுகத் தொகுதியின் செயற்பாடுகளை  கட்டம் கட்டமாக மீண்டும் ஆரம்பிப்பதற்கான துரித முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பிலும் சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


குருநகர் பகுதி மக்களது காணி உரிம பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்த  முயற்சிக்கு நீதி அமைச்...
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு!
பூநகரி பரமன்கிராயில் கைவிடப்பட்டிருந்த இறால் பண்ணைகளை தனியார் நிதிப் பங்களிப்புடன் மீளச் செயற்படுத்த...