நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!

Thursday, April 25th, 2024


…..
இலங்கையில் நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த ஒப்பந்தமானது கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நெக்டா நிறுவனத்திற்கு ஜப்பான் நாடு மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கும் முக்கிய நிகழ்வாக  அமைந்தது.

ஜப்பான் நாடு எமக்கு வழங்கிய 3 மில்லியன் அமெரிக்க டொலர் ஊடாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய வளங்களை வளப்படுத்தும் எப். ஏ. ஓ. நிறுவனமும் ,நெக்டா நிறுவனமும் இணைந்து  இலங்கையில் புதிதாக நான்கு நன்னீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கும், ஏற்கெனவே நெக்டா நிறுவனத்தினால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படும் நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்துப்படவுள்ளது.

உணவு உற்பத்தியை ஊக்குவிப்பது மற்றும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வது என்ற அரசாங்கத்தின் பிரதான கொள்கைக்கு வலுச் சேர்க்கும் நடவடிக்கையாக இன்றைய ஒப்பந்தம் அமைந்துள்ளது.

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளரும், எப். ஏ. ஓ வின் இலங்கைக்கான பிரதிநிதியும் , இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவராலய செயலாளரும் கையொப்பமிட்டனர்.
000

Related posts:


காக்கைதீவு மீனவர் இறங்குதுறை பகுதி பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு!
எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்...