நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு – புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, March 10th, 2022
நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதற்கான மீன் குஞ்சுகளை உருவாக்கும் நோக்குடன் புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்பட்டு வருகின்ற தொட்டிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைபெற்று வருகின்ற கட்டுமானப் பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட சுமார் 30 தொட்டிகளை உள்ளடக்கிய நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான குறித்த கட்டமைப்பு, சீரான முகாமைத்துவம் இன்றி பாழடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக கௌரவ டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதும், சமூக அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, புதுமறிப்பு நன்னீர் மீன் வளர்ப்பு தொட்டிகள் புதுப் பொலிவு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? ...
எமது பயணத்திற்கு மக்களும் பக்கபலமாக இருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் ட...
|
|
|


