நகரமயமாகும் பூநகரி – நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!
 Friday, December 29th, 2023
        
                    Friday, December 29th, 2023
            
பூநகரி நகரமயமாக்கல் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இன்று (29.12.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூநகரியை மத்திய நகரமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 500 மில். ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.
பூநகரியை மத்திய நகரமாக மாற்றும் உத்தேச திட்டத்தின் மூலம் நகர மையக்கட்டிடம், வடிகான் அமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், வர்த்தக பொருளாதாரக் கட்டமைப்பு, சுற்றுலா அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, இரணைதீவு இறங்குதுறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இக் கலந்தாய்வின்போது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு நிகழ்கால மற்றும் எதிர்காலங்களில் பயனடையும் விதத்தில் வாழ்வாதாரத் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        