தோழர் 30″ ஓய்வற்ற நெடும்பயணம்!
Saturday, August 17th, 2024
“
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைத்து , தேசிய நல்லிணக்கமே எமது வழிமுறை என்று ஒரு தீர்க்கமான தீர்மானம் எடுத்த நாள் இன்றாகும்.
எமது மக்களுக்கான உரிமைப் போராட்டம் உன்னதமானது. அதற்காக உயிரையும் தியாகம் செய்யத்துணிந்து எமது தலைவர் களத்தில் நிமிர்ந்து நின்றார்.
போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் , எமது போராளிகளுக்கு வழிகாட்டவும் பாலஸ்தீனம்வரை சென்றும் பயிற்சிகள் பெற்று முன்மாதிரியான தோழனாக தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன் நின்ற அந்த நாட்கள் பசுமையானவை.
எமது உரிமைப்போராட்டம் வழி தவறியும், தலைமைப்போட்டியால் திசைமாறிச் சென்றதால் எழுந்த இயக்க மோதல்கள் மற்றும் இயக்கங்களுக்குள்ளே மோதல்கள் என தொடங்கிய சகோதரப் படுகொலைகள் தலை விரித்தாடியதால் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் அப்போதே தோற்றுப்போனது என்பது மறுக்க முடியாத வரலாறு.
ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டத்திற்கான தேவையும் , அதற்கான நியாயமும் இருந்தது என்று இப்போதும் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடக் கூறுகின்றார். அந்த ஆயுதப் போராட்டம் பின்னாளில் அளவுக்கு மிஞ்சியதாகவும் , கொலைகளுக்கூடாகவே விடுதலை சாத்தியம் என்ற மாயையின் பின்னாலும் இழுபட்டுச் சென்றதால் எந்த மக்களின் உரிமையை வென்றெடுக்கவென ஆரம்பிக்கப்பட்டதோ அந்த மக்களின் உரிமைகளையே அடக்குவதாகவும் மாறிப்போனது. அது தமிழ் மக்களுக்கு பெரும் பின்னடைவையும் , ஏமாற்றத்தையும் கொடுத்தது என்று அன்றே கூறியவர் எமது தலைவர்.
அவர் அன்று கூறியவை தீர்க்க தரிசனமானவை என்பதை காலம் பின்னாளில் உலகுக்கு உணர்த்தியது. உரிப்போராட்டம் தவறான வழியில் சென்றதால் தமிழ் மக்கள் உள்ளதையும் இழந்தவர்களானார்கள். உறவுகளையும் , உடமைகளையும் , தொடர்புகளையும் இழந்து ஓரிடமிருந்து இன்னோரிடம் நகர முடியாதவர்களாகவும் , நாளாந்தம் கையேந்தும் பரிதாபத்திற்கும் ஆளாகியும் நின்றார்கள்.
அந்தரமான அந்நாளில் சிங்கத்திற்கும் , புலிக்கும் இடையே சிக்கிக்கொண்டவர்களாக தமிழ் மக்கள் செய்வதறியாது ஆழ்கடலில் வீழ்ந்தவர்கள் போல் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த தத்தளிப்பான நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாகவும், மீட்புக்கரமாகவும் அன்று நீட்டப்பட்டது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலான ஈபிடியினராகிய எமது தோழமைக்கரங்கள் மட்டும்தான்.
எமது கரங்களை வெட்டவும் , எம்மைக் கொலை செய்யவும் புலித்தலைமை தன்னாலான அனைத்து முயற்சிகளையும், அனைத்து வழிகளிலும் செய்தது.
புலித்தலைமையின் கொலைக் கரங்களையும், கொலைக் கருவிகளையும் எதிர்கொண்டு தோழர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும் , அர்ப்பணிப்பும் நிகரற்றது. அது மகத்தான மக்கள் சேவை.
அத்தகையதொரு காலச்சூழலிலேயே எமது உரிமைப்போராட்டத்தின் போக்கிலும் ,அணுகுமுறையிலும் நின்று நிதானித்து நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் பயணிக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை ஈபிடிபியினராகிய நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களானோம்.
அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி தமிழ் மக்கள் இழந்த உயிர்களை மீட்க முடியாத போதும் இழந்த நிலத்தையும், வாழ்வையும் , பொருளாதார வளத்தையும் பாதுகாக்க நாடாளுமன்றத்தின் உள்ளேயும் , வெளியேயும் , இதர அதிகார தளத்திலும் தலைவர் டக்ளஸ் தேவானந்தா போராடினார்.
போராட்ட வடிவத்தை நடைமுறைச் சாத்தியமாக மாற்றிக்கொண்ட ஈபிடிபியின் அணுகுமுறைகளின் விளைவுகளாக சாதிக்கப்பட்டவை எவை என விளக்க பலவற்றை பதிவிட நேரிடும்.
குறிப்பாக கூறினால் பாதுகாப்பு தரப்பிடமிருந்து மீளப்பெறப்பட்ட ஆயிரக்கான ஏக்கர் நிலங்களை விடுவித்தது ஆயுதப்போராட்டம் அல்ல. அது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அணுகுமுறையின் விடுவிப்பு. அதுமட்டுமல்ல
சமுர்த்தி,சுகாதாரத் தொண்டர்கள் , தொண்டர் ஆசிரியர்கள், பனைசார் தொழிலாளர்கள், கடல்சார் தொழிலாளர்கள், விவசாயிகள், சுயதொழில் முயற்சியாளர்கள் என எமது தாயக மன்னில் வாழ்வோரின் வாழ்வாதாரத்தில் ஈபிடிபியின் பங்களிப்புகள் அல்லது உதவிகள் ஏதேனும் ஒருவகையில் கலந்துள்ளது என்பதை மனச்சாட்சியுடன் எண்ணிப்பார்ப்போர் ஏற்றுகொள்வர்.
இப்படி பட்டியலிட்டால் அது முடிவற்றதாகத் தொடர்கிறது.
இந்த மக்கள் சேவையை செய்வதற்காக உறுதிமிக்க தலைமைத்துவத்தை வழங்கி மக்கள் நலனே தன் நலன் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெருந்தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற அந்தப் பொன்னாள் இன்றைய நாளாகும்.
அவரின் இந்த முப்பது வருட நெடும் பயணத்தில் பல சவால்களையும் , கொலை அச்சுறுத்தல்களையும் , உள்நோக்கத்திலான பல விமர்சனங்களையும் , கூடவே இருந்த சிலரின் துரோகங்களையும் அவர் எதிர்கொண்டிருக்கின்றார்.
பல் கட்சி ஜனநாயகம் எமது மக்கள் மத்தியில் உருவாக வேண்டும் என்ற பரந்த மனதோடு “ஆயிரம் பூக்கள் மலரட்டும் “என்று வரவேற்றார்.
தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புலிகளுக்கும் மனிதநேயம் கற்பித்தவர்.
கொலைகளுக்கூடாக தீர்வுகள் சாத்தியம் இல்லை. சகோதரப் படுகொலையை கைவிட்டு ஒரு குரலில் பேச வாருங்கள் நானும் சேர்ந்து வருகிறேன் என்று தன்னை கொலை செய்யத்துடித்த புலித்தலைமைக்கே சகோதரத் தூது விட்டவர்.
தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் “மக்கள் நலன் மற்றும் தமிழர் தேசத்தின் மீள் எழுச்சி”எனும் உயரிய நோக்கத்தை நிறைவேற்றும் பயணத்தில் பல தோழர்கள் தமது இன்னுயிரை மக்களுக்காக தியாகம் செய்திருக்கின்றார்கள். பலர் தமது அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பை வழங்கியிருக்கின்றார்கள். இன்னும் வழங்கிக் கொண்டும் இருக்கின்றார்கள்.
இன்னும் பல தோழர்கள் தமது ஆலோசனைகளையும், தம்மாலான பங்களிப்பையும் வழங்கியிருக்கின்றார்கள்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் மனச்சாட்சியுள்ள தமிழ் மக்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை 1994 ஆண்டிலிருந்து நடைபெற்ற அத்தனை நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இன்றுவரை தோல்வியை நெருங்கவிடாது வெற்றி பெறச் செய்து தொடர்ச்சியாக 30 வருடங்கள் நாடாளுமன்றம் செல்லும் வெற்றி நாயகனாக தலைவரை தலை நிமிரச் செய்திருக்கின்றார்கள்.
இந்த நீண்ட பயணம் தேவையுள்ள மக்களுக்கு தீர்வாகவும், குரலற்ற மக்களின் குரலாகவும், நலிந்த மக்களின் குரலைக்கு செவி சாய்க்கும் மனித நேயமாகவும் , பலரின் கோரிக்கைகளுக்கு பதிலாகவும் இன்னும் தொடர்கிறது.
நெருப்பாறு கடந்து ஓய்வறியா மக்கள் நேசகனான தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பாதங்களின் பயணம்
இன்னும் தொடரும்……..
“போற்றுவோர் போற்றட்டும். தூற்றுவோர் தூற்றட்டும் என் பணி மக்கள் நலன் செய்து கிடப்பதேயாகும்” என்று தலைவர் டக்ளஸ் தேவானந்தா தனது பயணத்தை தொடர்கின்றார்.
அப்பணி சிறக்க அவரின் அந்த உயரிய மக்கள் பணிக்கு வலுச்சேர்க்க நாமும் தோழோடு தோழ் நிற்போம்.
என்றும் நாம் மக்களுக்காக……
தோழர்கள்
Related posts:
|
|
|


