தேவைகளை பெற்றுக்கொள்ளமுடியாது அவதியுறுகின்றோம் – வடபகுதி மக்கள் ஆதங்கம்!

Wednesday, June 15th, 2016

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழமையான செயற்பாடுகளில் ஒன்றான பொதுமக்கள் சந்திப்பில் பல நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்து அவர்களது தேவைப்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு இன்றையதினம் (15) நடைபெற்றது. இதில் கிளிநொச்சி , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இதன்போது தாம் வாழும் பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் தமது வாழ்வாதார பொருளாதார மேம்பாட்டுக்கான உதவித்திட்டங்கள், வீட்டுத்திட்டம், குடிநீர் வசதி, மின்சாரம், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, விவசாயம், கால்நடைவளர்ப்பு உள்ளடங்கலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் எடுத்து விளக்கினர்.

மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தேவைப்பாடுகளின் அடிப்படையிலும் அவற்றின் முன்னுரிமை அடிப்படையிலும் துறைசார்ந்தவர்களூடாக கலந்துரையாடி அவற்றை நிவர்த்தி செய்வதற்கு காலக்கிரமத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தாவின் வழமையான செயற்பாடுகளில் ஒன்றான மக்களின் குறைகேள் சந்திப்பு இன்றையதினமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4

Related posts: