தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
Saturday, November 27th, 2021
எமது கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஜெகன் அவர்களின் தந்தையார் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்கள் இறுதி உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட செய்தியறிந்து அந்த இழப்பின் துயரில் நானும் பங்கெடுக்க வேண்டியவனாக உள்ளேன் என ஈழ மக்கள்’ ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
நீதியான எமது உரிமைப்போராட்டத்தை, நான் அன்றைய எமது ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை தளத்தில் நின்று வழி நடத்திச்சென்ற போது அவரது இல்லம் தேடி சென்றிருக்கின்றேன். அப்போதெல்லாம், எம்மை அன்பால் வரவேற்று உணர்வால் ஆதரித்து உபசரித்த அவரது தேசபக்த உணர்வை எண்ணிப்பார்க்கிறேன்.
தமிழர் தேசத்தின் விடியலை நேசித்து தனது மகன் தோழர் ஜெகன் அவர்களை இள வயதில் இருந்தே எமது புனித இலட்சிய பயணத்தில் இணைய வைத்த அவரது தேச விடியல் மீதான தீராத நேசிப்பை நினைத்துப் பார்க்கிறேன்.
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என நாமே திடசங்கர்ப்பம் பூண்டு,..எமது உரிமை நோக்கிய பயணத்தில் தீர்க்கதரிசனமாக நாம் ஏற்றுக்கொண்ட தேசிய நல்லிணக்க பாதையில் பயணிக்க தொடங்கிய போதும்எமது தர்மவழி இலட்சிய பயணத்திற்கு ஆதரவு தந்தவர் தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்கள். இழப்பின் துயரில் வதை படும் அவரது உறவுகளுக்கும் தந்தையை இழந்து தவிக்கும் ஜெகன் தோழருக்கும் ஆறுதல் கூறுகின்றேன்.
தேச விடியல் நேசர் அமரர் கார்த்திகேசு வேலும்மயிலும் அவர்களுக்கு ஆழ்மன அஞ்சலி மரியாதை என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


