தேசிய மொழிக் கொள்கையில் தமிழ் மொழியின் வகிபங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, May 23rd, 2017

எமது நாட்டில் தேசிய மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியப் பங்கு கல்வி அமைச்சுக்கும் உரியது. இதனைப் புறக்கணிக்கும் போக்கிலிருந்து மீண்டு, தேசிய மொழிக் கொள்கையைப் பூரணமாக அமுல்படுத்தக்கூடிய வகையில் கல்வி அமைச்சு செயற்பட வேண்டும் என நான் இந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், கல்வி அமைச்சினால் காலத்திற்குக் காலம் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்கள், அறிவுறுத்தல்கள், அறிவித்தல்கள், கையேடுகள் என்பன விடுக்கப்படுகின்ற போதும், கலந்துரையாடல்கள், பயிலமர்வுகள், செயலமர்வுகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்ற போதும் இரு மொழி பயன்பாட்டின் அவசியம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதை விடுத்து, தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அவற்றை மேற்கொள்வதால், அது கூலிக்கு மாரடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றதே தவிர அதனால் தமிழ் மொழி மூல பயன்பாட்டாளர்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து- பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு - அம...
இழுவை வலை தொழிலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. - அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!