தீவக மக்களின் இருப்புக்கான வரலாற்றை எழுதிவைத்த பெருமை டக்ளஸ் தேவானந்தாவையே சாரும்!

Thursday, February 1st, 2018

டக்ளஸ் தேவானந்தா என்ற மனிதர் இல்லாது விட்டிருந்தால் தீவகம் இன்று இல்லாது போயிருக்கும் என்று நயினாதீவு ஶ்ரீ ஆலடியம்மன் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நயினாதீவு வடக்கு பகுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

டக்ளஸ் தேவானந்தா என்ற மனிதரை நயினாதீவு மட்டுமல்லாது தீவக மக்கள் அனைவரும் எப்போதும் நன்றியுடன் நினைவு கூரிக்கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் நாம் வாழ வழியற்று நின்றபோது எமக்கு வழிகாட்டியாக மட்டுமல்லாது அந்தந்த நேரங்களில் வாழ்வுக்கு ஒளியூட்டியவராகவும் டக்ளஸ் தேவானந்தாவே விளங்குகின்றார்.

ஏனைய தமிழ்க் கட்சிகள் எத்தனையோ இருந்தாலும் நாம் அவர்களை நேசிக்கவோ ஆதரிக்கவோ விரும்பியது கிடையாது. ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாடம் கற்கவேண்டும். நேர காலம் பாராது மக்களுக்காக உழைக்கும் ஒரு கரும வீரனாகவே தீவக மக்களாகிய நாம் டக்ளஸ் தேவானந்தா ஐயாவைப் பார்க்கின்றோம்.

தீவக மக்களின் இருப்புக்கான வரலாற்றை எழுதிவைத்த பெருமை அந்த மகோ உன்னத மனிதரையே சாரும். ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாம் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் உழைத்துவரும் நிலையில் டக்ளஸ் தேவானந்தா ஐயா மட்டுமே மக்களுக்காக மக்கள் மத்தியில் இருந்து உழைத்து வருகின்றார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா – நயினாதீவு மட்டுமல்லாது முழுத் தீவகமும் பாலைவனமாக இல்லாது சோலைவனமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.  நாம் ஏனைய சக தமிழ்க் கட்சிகள் போல கோயில் காலத்து வியாபாரிகளாக வந்து போவது கிடையாது. எப்போதும் மக்களுடனேயே நின்று மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று தெரிவித்துள்ளதுடன் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வெற்றியை மக்கள் எமக்கானதாக பெற்றுத்தந்தால் நிச்சயம் தமிழ் மக்களின் வாழ்வை ஒளிமயமானதாக மாற்றிக் காட்டுவோம் என்றார்.

Related posts:

தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் -மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள்-நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...
மன்னார் விரிகுடா எதிர்கொள்ளும் விவகாரங்களும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் - வங்காள விரிகுடா கலந்துரையா...