தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, November 22nd, 2020

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தீவகப் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்துவசதிகளை அதிகரித்து அபிவிருத்திக்கான அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் ஊர்காவற்துறை – காரைநகருக்கு இடையிலான பாலத்தினை அமைப்பதற்கும், அராலி –  குறிகட்டுவான் இடையிலான வீதியை கார்ப்பெட் வீதியாக மாற்றுவதற்குமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 30 கிலோ மீற்றர் நீளமான அராலி – குறிகட்டுவான் வீதியை கார்பெற் வீதியாக மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், ஆட்சி மாற்றம் காரணமாக தொடர்ந்து வேலைகள் முன்னெடுக்க முடியாமல் போயிருந்தது.

இந்நிலையில், தற்போது அமைச்சரவையில் குறித்த விடயம் தொடர்பானா கோரிக்கை கடற்றொழில் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோவினால் குறித்த வீதியை கார்பெற் வீதியாக மாற்றுவதற்காக சுமார் 3000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது..  

அதேபோன்று,  ஊர்காவற்றுறை -காரைநகர் ஆகிய பிரதேசங்கள் சுமார் 500 மீற்றர் நீரேரியினால் பிரிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பிரதேசங்களை இணைக்கும் வகையில் பாலம் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளபபட்டுள்ளது.

இதன்மூலம், இதுவரை காலமும் மிதக்கும் பாதையின் மூலம் போக்குவரத்தை மேற்கொண்டு வந்த பிரதேச மக்களின் போக்குவரத்து இலகுவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் சுமார்  4700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: