திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்தி புணர்நிர்மான பணிகள் முழுமையடைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Tuesday, October 31st, 2023

பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் திருமுறுகண்டி ஆலயத்தின் தனித்துவமான அடையாளங்கள் மாறாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதன் புணர்நிர்மான பணிகள் முன்று வருடகாலத்தித்தில் முழுமையடைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க முறுகண்டி பிள்ளையார் ஆலயத்தில் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான  வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவுகளை எடுக்கவுள்ள முன்னாயத்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருமுறுகண்டி அரை ஏக்கர் திட்ட பகுதியை மக்களின் பாவனைக்கு விடுவித்து கொடுக்கும் கோரிக்கைக்கு அமைவாக  குறித்த பகுதிக்கு கள விஜயம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த பகுதி யுத்த காலப்பகுதிக்கு முன்னார் மக்கள் குடியிருந்தது நிலையில் மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற நிலைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பகுதியை மக்களின் பாவனைக்கு விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

00

000

Related posts:


வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரச அதிக...
கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடல்!