கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரச அதிகாரிகளுக்கு நல்ல முன்னுதாரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 29th, 2020

அண்மையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் நல்ல முன்னுதாரணமாக அமைந்திருக்கும் என தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் பங்குபற்றி ஒத்துழைப்பு வழங்கியதையும் அவர்களுடைய கருத்தினையும் உள்வாங்கி அமைச்சராகிய தாங்கள் தீர்மானம் மேற்கொண்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தமை தொடர்பில் ஊடக நேர்காணலென்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்-

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பிரதேச சபைத் தவிசாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர்.

யுத்ததினால் அழிக்கப்பட்ட மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான விடயத்தில் அரசியல் தாண்டி செயற்பட வேண்டும்  என்ற அடிப்படையிலும் குறித்த அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் என்ற கடப்பாட்டின் அடிப்படையிலும் அவர்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கியிருந்தேன். ஆக மொத்தத்தில் ஆரோக்கியமான கூட்டமாக அமைந்திருந்தது.

மேலும் இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கி நகர வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றவன் என்ற அடிப்படையில் மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பான இவ்வாறான விடயங்களில் அரசியல் வாதங்களை முன்வைப்பதை தவிர்த்து ஒத்துழைக்க முன்வருகின்ற அனைத்து தரப்புக்களையும் அரவணைத்து செல்வது சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

குறித்த கூட்டம் கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது கூட்டமாக இருந்த போதிலும் கல்வி வலயத்தினை பிரிக்கும் செயற்பாடு – இரணைதீவில் மாதிரி கால்நடை பண்ணை ஒன்றினை ஆரம்பித்தல் – தான்தோன்றித்தனமாக அரச காணிகள் பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துதல் – போக்குவரத்து விபத்துக்களைக் கட்டுப்படுத்தல் உட்பட சுகாதாரம் – கல்வி – உட்கட்டமைப்பு போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள கலந்துரையாடப்பட்ட ஆரோக்கியமான கூட்டமாக அமைந்திருந்தது.

அதேபோன்று இன்னுமொரு செய்தியும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக நினைக்கின்றேன். அதாவது அரசியல் வேறுபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இது நல்ல முன்னுதாரணமாக அமைந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிரந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நடேஸ்வராக் கல்லூரி  : எமது அரசியல் அணுகுமுறைகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி - டக்ளஸ் தேவானந்தா
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பணிப்பெண்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை - நாடாளுமன்றில் டக்...
மீண்டும் மக்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முடியாது : மல்லாவி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை...

தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...
சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
சுண்டிக் குளத்தில் சட்டவிரோத இறால் கூடுகளை அகற்ற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - வாழ்வாதார உதவிகளும் வழங...