திருக்கோணேஸ்வரர் வீதியுலா பூசைவழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Wednesday, March 1st, 2017
மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வரலாற்றுச் பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரர் சுவாமிகள் வீதி உலா செல்லும் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அர்ச்சனைத் தட்டு வழங்கி சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
திருகோணமலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த சுவாமி வீதியுலா நிகழ்வில் பங்கேற்று, சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆச்சாரியார்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வருடாவருடம் திருக்கோணேர்வரர் சுவாமிகள் திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய வீதிகளூடாக சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுதாருங்கள்: டக்ளஸ் எம்.பியிடம் ஒட்டிசுட்டான் கரடிப்புலவு...
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - உலக உணவு மற்றும் விவசாய அ...
|
|
|


