திருக்கோணேஸ்வரத்தின் மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Saturday, February 25th, 2017
வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருகோணமலை திருக்கோணேவரர் ஆலயத்தின் மாஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள டக்ளஸ் தேவானந்தா பிரத்தியேகமாக மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் பங்கெடுத்திருந்தார்
ஆறு கால ஜாமப் பூசைகள் நடைபெறும் சிறப்பு நாள் வழிபாடுகளில் பங்கேற்ற அதேவேளை கோயிலின் பிரதம் சிவாச்சாரியார்களின் ஆசியையும் பெற்நுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மாஹா சிவாராத்திரியன்று ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் - மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...
யாழில் 260 இலட்சம் செலவில் அபிவிருத்தி திட்டம் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !
|
|
|


