தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, February 21st, 2018
இன்று அதிகாலை தியத்தலாவை பகுதியில் வைத்து யாழிலிருந்து சென்றதாகக் கூறப்படுகின்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் மிக அவதானமாக செய்திகளையும், தகவல்களையும் வெளியிட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி சம்பவமானது கண்டிக்கத்தக்கதும், வருந்தத்தக்கதுமாகும். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் அறியப்பட வேண்டும். அதேநேரம், பொறுப்புவாய்ந்த ஊடகங்கள், பொறுப்புமிக்க அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் கருத்து கூறுகின்றபோது, செய்திகளை வெளியிடுகின்றபோது , தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், அப்பாவித் தமிழ் மக்கள்மீது பலியினைப்  போடாத வகையிலும்; நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்;ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக...
வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
தனக்கென ஒரு அரசியல் சித்தாந்தம் கொண்ட டக்ளஸ் - சட்டத்துறை வல்லுநர் பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாத...