தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!
Monday, April 1st, 2024
தாய்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற இச்சந்திப்பின்போது கடற்றொழில் சார்ந்து முதலீடுகளைச் செய்வதற்கு தாம் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்ததுடன் , இலங்கை கடற்றொழில் துறையில் எவ்வாறான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறிந்துக்கொள்ள தாம் விரும்புவதாகவும் தாய்லாந்து முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கையின் கடற்றொழில் சார்ந்த பல நிறுவனச் செயற்பாடுகள் இருக்கின்றன அவற்றுடன் ஆராய்ந்து சாத்தியமான திட்டமொன்றை தயாரித்தரும்போது அதுபற்றி இலங்கையின் தேசிய கொள்கைகளுக்கு அமைய ஆராய முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர், அமைச்சரின் ஆலோசகர்கள், கடற்றொழில் இராஜாங்க அமைச்சரின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


