தமிழ் மக்களது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்ய எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் – டக்ளஸ் எம்.பி!
Wednesday, February 7th, 2018
சமூக அக்கறை உள்ளவர்களை உள்ளீர்துக்கொண்டு அவர்களது ஆலோசனைகள் கருத்துக்களுக்கு அமைவாக எமது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து முன்னேற்றம் காணச் செய்வதற்கு எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகரில் திரண்டிருந்த ஜனத்திரள் மத்தியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் –
யுத்த காலத்தலும் சரி யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான காலத்திலும் சரி தமிழ் மக்களது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும் நாம் அர்ப்பணிப்புடனும் சமூக அக்கறையுடனும் உழைத்திருக்கின்றோம்.
அவ்வாறே எதிர்காலத்திலும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து எமது இனத்தின் சமூக மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் உழைக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்.
யாழ் மாநகரசபை எமது ஆளுகைக்குள் இருந்தபோது யாழ்ப்பாண இராசதானி சங்கிலிய மன்னின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் புனரமைப்புச் செய்திருந்தேன். தமிழ் தூது தனிநாயகம் அடிகளாருக்கு மட்டுமன்றி தமிழ் மன்னர்களான பண்டாரவன்னியன் எல்லாளன் பரராஜசேகரன் ஆகியோரின் நினைவாக யாழ்.மணிக்ககூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தில் சிலைகளை நிறுவி தமிழரின் வரலாற்றை பதிவிட்டிருந்தோம்.
அத்துடன் நகரிற்கு அழகு சேர்க்கும் வகையில் மழலைகள் பூங்காக்களையும் இன்னோரென்ன வேலைத் திட்டங்களையும் நாம் சமூக அக்கறையுடன் செயலாற்றியுள்ளதை வரலாறு பதிவிட்டுள்ளது.
அத்துடன் நகரின் அழகு மட்டுமன்றி அதன் சுத்தம் சுகாதாரம் போன்ற செயற்பாடுகளிலும் கடந்தகாலங்கில் அர்ப்பணிப்புடனான எமது உழைப்பை மேற்கொண்டிருந்தோம்
அந்தவகையில் யாழ் மாநகருக்கு உட்பட்ட மக்களுக்கு கிடைக்கவேண்டிய செயற்படுத்த வேண்டிய பல்வேறு வேலைத்திட்டங்களையும் நிச்சயம் முன்னெடுப்போம் நகரின் அழகை மேலும் மேம்படுத்தும் வகையிலான செயற்றிட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.
அந்தவகையில் எமது சமூகத்திலுள்ள புத்திஜிவிகள் மற்றும் கல்விமான்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் உள்வாங்கி எமது கலை காலாசார பண்பாட்டு விழுமியங்களை மேலும் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
Related posts:
|
|
|






