தமிழ் தலைமைகள் இல்லாத ஊருக்கு வழி காட்டுகின்றன: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, June 12th, 2020
பெரும்பாலான தமிழ் தலைமைகள் தங்களின் சுயநலன்களுக்காக மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மன்னார் விஷன் 6 அமைப்பினரை சந்தித்து கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும், பெரும்பாலான தமிழ் தலைமைகள் கடந்த காலத்தில் தெரிவித்த விடயங்கள் தவறானவை என்பதை வரலாறு வெளி்ப்படுத்தியிருக்கின்றது என்பதையும் சுட்டிக் காட்டினார்.
கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழ் தலைமைகளின் தவறான தீர்மானங்கள் காரணமாக இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டினையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், எதிர்காலத்திலாவது மக்கள் யதார்த்தத்தினை உணர்ந்து செயற்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்திலாவது சரியானவர்களை தெரிசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்
Related posts:
|
|
|







