தமிழரின் வழக்குகள் நிலுவையில் கிடக்கின்றன – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 24th, 2016

உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாகாண மேல் நீதிமன்றங்களிலும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் நிலுவையில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான வழக்குகளை இலகுபடுத்துவதற்காக தமிழ்மொழி மூலமான நீதிபதிகளை நீதிமன்ற அமர்வுகளின்போது அமர்த்த வேண்டுமென்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில்

ஏற்கெனவே இந்த நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்ட போதும் இந்த வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின்போது நான் வலியுறுத்தியமைக்கமைவாகவும் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாகாண மேல் நீதிமன்றங்களிலும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களிலும் தமிழ் பேசும் மக்கள் தொடர்பான வழக்குகள் பல நிலுவையில் இருப்பதன் காரணமாகவும் தமிழ் மொழி பேசுகின்ற மக்களுக்கு இலகுவானதோர் ஏற்பாடு என்ற வகையிலும் தமிழ்மொழி மூலமான நீதிபதிகளை நீதிமன்ற அமர்வுகளின்போது அமர்த்த வேண்டுமென்ற விடயத்தை நான் இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இது இனரீதியான கோரிக்கையல்ல. எமது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் கருதியே இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்பதை அவதானித்தில் கொள்ளவேண்டுமென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

01

Related posts:


மன்னார் கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப்பு!
யாழ். மாட்டின் குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம...
அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில்முறைகளை முற்றாக கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ்...