தமிழகத்தின் புதிய முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!
Sunday, May 2nd, 2021
தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
குறித்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்ராலின் வெற்றியை நெருங்கியுள்ள நிலையில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்பரப்பினுள் ஊடுருவி சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்ற இந்தியக் கடற்றொழில் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்ராலின் அவர்களின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்க்கது.
Related posts:
களுத்துறை சிறை தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிந...
தொடரும் மழையால் எள் செய்கை பாதிப்பு - இழப்பீடு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் குடாநாட்டு விவசா...
|
|
|


