டோக்கியோ சிமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை பூநகரியில் – முதல் கட்ட திட்ட வரைவு நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது!
Thursday, November 3rd, 2022
டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினை பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் அமைப்பதற்கான முதல் கட்ட திட்ட வரைவு, டோக்கியோ சீமேந்து நிறுவனத்தின் உயரதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டு தமது சந்தேகங்களையும் எதிர்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட சந்தேகங்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னர் மக்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையிலான அறிக்கை சமர்ப்பிக்குமாறு சீமேந்து தொழிற்சாலை பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
000
Related posts:
யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
சமூகவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த மக்களின் விழிப்புணர்வு அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை - ஊடகவியலாளர் சந்த...
|
|
|


