அக்கரையில் போராடும் மக்களை சந்தித்தார் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

Tuesday, September 26th, 2017

அக்கரைப் பகுதியில் அமையப்பெற்றுள்ள சுற்றுலா மையத்தை நீக்கி அப்பகுதியை சிறுவர் விளையாட்டரங்காக மாற்றுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்தா அப்பகுதிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடினார்

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழான புத்தூர் பிரதேச சபைக்கு சொந்தமான அக்கரை கிராமத்தின் கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கு வருவோர் பல்வேறுவிதமான சமூகத்திற்கு ஒவ்வாத காரியங்களில் ஈடுபட்டுவருவதாகவும் எனவே அப்பகுதியை சிறுவர் விளையாட்டரங்காக மாற்றவேண்டும் எனக்கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

பிரதேச சபை மற்றும் மாகாண சபைகளுக்கு எதிராக பல்வேறு சுலோகங்களைத் தாங்கியவாறு இப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

ஒருவாரகாலம் கடந்துள்ள நிலையிலும் பிரதேச சபையிடம் இருந்தோ வடக்கு மாகாணசபையிடமிருந்தோ உரிய பதில்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறாத நிலையில் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனையடுத்தே இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்திக்கும் பொருட்டு டக்ளஸ் தேவானந்தா அப்பகுதிக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

இதன்போது கட்சியின் வலிகாமம் கிழக்கு நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

Related posts:

தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...
சுகாதார தொண்டர் நியமனம் - ஜனாதிபதியின் தீர்மானத்தை வெளிப்படுத்தினார் அமைச்சர் டக்ளஸ்!
பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை - அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை தொடர்ந்து சுகாதாரத் தரப்ப...