டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்த துரித செயற்றிட்டம் – மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை களையவும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, December 26th, 2023
அதிகரித்து வரும் டெங்கு நோயின் பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளதாக தேவையான நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்குமாறும் பணித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர டக்ளஸ் தேவானாந்தா மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக களையவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள “ஜாக்” தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம்(26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பருவ மழையை அடுத்து யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் பணிமனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இது தொடர்பில் பணிப்பாளருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்க கூறியதுடன், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
குறிப்பாக நுளம்புக்கு புகை அடிப்பது, டெங்கு பரவும் சூழல்களை இனம் கண்டு அவற்றை அழிப்பது போன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், யாழ்.போதனா வைத்திசாலையில் அண்மைக்காலமாக மருத்துவ தவறுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் , ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேட்டபோது –
மருத்துவ தவறுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன என்பது தொடர்பில் எனக்கு அறிய தரப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அவ்வாறான மருத்துவ தவறுகள் காணப்பட்டால் அவற்றை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேநேரம் போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும், கூறப்படுகிறது. தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக வரும் வாரம் யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வருகை தரும்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைப்பாடுகள் தொடர்பில் நேரில் தெரிவித்து, அவற்றை நிநிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


