டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலையீட்டால் ஊர்காவற்துறை காணி சுவீகரிப்பு இடைநிறுத்தம்!

கடற்படையினரின் பாதுகாப்பு மற்றும் அவதானிப்பு மையம் அமைப்பதற்கெனக் கூறப்பட்டு, ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி, நில அளவைத் திணைக்களத்தினால் நாளைய தினம் அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் காணி உரிமையாளர் உட்பட ஊர் பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அவதானத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, காணி அமைச்சர் மற்றும் நில அளவையாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்பு கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நில அளவீட்டு செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளார்.
எமது மக்களது காணி, நிலங்களில் பல படையினரிடமிருந்து இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள நிலையில், எமது மக்களுக்குச் சொந்தமான மேலும் காணிகளை படையினரின் பல்வேறு தேவைகளுக்கு என சுவீகரிப்பது நியாயமற்ற செயற்பாhகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மேற்படி காணி விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, அது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வரும்வரையில் இக் காணி அளவீட்டை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தி கடல்வளத்தை பாதுகாக்க வேண்டும்
மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார்கள் எனக் கூறிக்கொண்டாலும் அவ்வாறான நிலைமை இன்னமும் ஏற்படவில்லை எ...
நிவர் புயல் பாதிப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!
|
|