டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியை உறுதிசெய்வோம் – யாழ் மாவட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள்!
Wednesday, December 13th, 2017
மக்களுடன் நின்று மக்களுக்காக பணிபுரியும் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றியை உறுதி செய்யவேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை என யாழ் மாவட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்களை டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உரும்பிராயில் சந்தித்து கலந்துரையாடும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
குடாநாட்டில் நீண்டகாலமாக குறித்த இத்தொழிற்றுறையை நாம் முன்னெடுத்து வந்திருந்தோம். இத் தொழில்துறையை நம்பி பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்த நிலையில் நாம் தற்போது இத்தொழிலை மேற்கொள்வதில் பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றோம்.
இதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறு வடக்கு மாகாண சபையிடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் நாம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அக் கோரிக்கைகள் யாவும் கானல் நீராகப்போய்விட்டன.
இந்தவகையில்தான் தற்போது தங்களது உதவியை நாடியிருக்கின்றோம் எனவும் அவலப்பட்டுள்ள எமது இந்த விடயத்தில் அவதானம் செலுத்தி உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அங்கு உரையாற்றும் போது கனியவளங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு உண்மைத்தன்மைகளை அறியும் விதமாக புவிச்சரிதவியல் திணைக்களத்துடன் கலந்தரையாடி விரைவில் தீர்டவினை பெற்றுத்தரவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே இவ்விடயம் தொடர்பாக தாம் ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவுடன் கலந்தரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக உரிய தீர்வினை பெற்றுத் தருவதற்கு விரையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார் அத்துடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் இங்கு தெளிவுபடுத்தியிரந்தார்.

Related posts:
|
|
|


